இப்படி நடிக்க முடியாது....ஷூட்டிங்கில் முரண்டு பிடித்த நடிகை ரித்விகா ..!

 
Published : Jan 05, 2018, 02:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
இப்படி நடிக்க முடியாது....ஷூட்டிங்கில் முரண்டு பிடித்த நடிகை ரித்விகா ..!

சுருக்கம்

rithvika avoid shooting scene

நடிகர் நடிகைகள் ஒரு சிலர் குறிப்பிட்ட காட்சியில் நடிக்க முடியாது என இயக்குனரிடம் கூறி அதனைத் தவிர்ப்பது காலம் காலமாக அரங்கேறி வரும் ஒரு செயல் தான். ஆனால் எப்படியோ இயக்குனர்கள் வற்புறுத்தியாவது அவர்களை அந்தக் காட்சியில் நடிக்க வைத்துவிடுவார்கள்... ஆனால் மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா  இயக்குனர் எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு சீனில் நடிக்க முடியாது என கறாராக கூறியுள்ளார்.   

மெட்ராஸ், ஒரு நாள்கூத்து, கபாலி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த ரித்விகா கதாநாயகியாக நடித்து வரும் திரைப்படம் தான் 'ஓநாய்கள் ஜாக்கிரதை'. இந்தப் படத்தில் விஷ்வந்த் ஹீரோவாக நடித்துள்ளார். 

பிரபல இயக்குநர் வெங்கடேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி வெங்கடேஷை, ரித்விகா கீழே தள்ளி மிதிக்கவேண்டும் என்பது போல் ஒரு சீனை இயக்குனர் வைத்திருந்தாராம். ஆனால் ரித்விகா .. இந்த சீனில் தன்னால் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் வெங்கடேஷ் வயதில் பெரியவர். அவரை மிதிக்கும் படி என்னால் எப்படி நடிக்க முடியும் என இயக்குனரிடம் வாதிட்டுள்ளார்.

அதன் பின்னர் வெங்கடேஷே இந்தக் காட்சி கதைக்குத் தேவை என்று ரித்விகாவிடம் எடுத்துக் கூறி சமாதானம் செய்த பிறகு அந்தக் காட்சியில் நடித்தாராம். இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்