
திருட்டு விசிடிக்களை ஒழிக்க வேண்டும் என தமிழ் திரையுலகினர் போராடி வரும் நிலையில், நடிகர் விஷால் இது தொடர்பாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார், பல இடங்களில் ரெய்டு நடத்தி புதுப்பட சிடிக்களை பறிமுதல் செய்தார்.
ஆனால் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் தொடர்ந்து வெவ்வேறு பெயர்களில் புதுப் படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறது. ஆனால் அணைமைக் காலமாக நடிகர் விஷால்தான் தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்… பங்குதாரர் என பல குற்றச்சாட்டுகளும் ,விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் 7 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி நடிகர் ரித்தீஷ் உள்ளிட்ட சிலர் தயாரிப்பாளர் சங்க கட்டடத்துக்கு பூட்டு போட்டனர். அந்த பூட்டை உடைப்பதற்காக விஷால் தரப்பினர் முயன்றதால், அவரை காவல் துறையினர் கைது செய்து மாலை விடுவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட யாரும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர் இல்லை என்றும், அவர்கள் இளையராஜாவுக்கு எதிரானவர்கள் என்றும் குற்றம் சாட்டினார். இளையராஜாவின் இசைக் கச்சேரியை நடத்தவிடக்கூடாது என்பது தான் அவர்களின் நோக்கம் என்றும் விஷால் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய நடிகர் ரித்தீஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் என்னயா உறுப்பினர் இல்லை என்றாய்...இதோ உறுப்பினர் கார்டு என்று கொதித்து எழுந்து சண்டை போட்டார் ரித்திஷ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.