வெறும் 15 மணி நேரத்தில் அடித்து துவம்சம் பண்ணிய அஜித்... ரஜினி நிலைமையை நீங்களே பாருங்க...

Published : Dec 21, 2018, 10:17 AM IST
வெறும் 15 மணி நேரத்தில் அடித்து துவம்சம் பண்ணிய அஜித்... ரஜினி நிலைமையை நீங்களே பாருங்க...

சுருக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தில் ஆஹா கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீடியோ மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் தல்லே தில்லாலே என்ற பாடல் ஒரே நாளில் வெளியாகி ரஜினியின் ஆஹா கல்யாணம் பாடலை பின்னுக்குத் தள்ளியியுள்ளது.

ரஜினியுடன்  முதன்முறையாக  பேட்ட படத்தில் நடிக்கும் த்ரிஷா, கேரக்ட்டர் ஏற்கனவே வெளியானது. போஸ்டரில் முறுக்கு மீசையுடன் ரஜினி ஊஞ்சலில் த்ரிஷாவை ஆட்டிவிடுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. தற்போது வெளியாகியுள்ள லிரிக்கல் வீடியோவில் இருவருக்குமான காட்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

“மருதாணி வைச்சது யாரு

கையெல்லாம் சிவக்குது பாரு

பச்சை இலை பந்திய போட்டா

மொத்த சனமும் தேடுது சோறு

பங்காளி சண்டையை பாரு

பத்தாது கோட்டரு பீரு

ஏதாச்சும் சொல்லிடும் ஊரு

கல்யாணத்தை பண்ணிப் பாரு”

என்ற இந்தப் பாடலை கு.கார்த்திக் எழுதியுள்ளார். அனிருத் இசையில் அந்தோணி தாசன் பாடியுள்ளார்.

அதேபோல, நேற்று மாலை 7 மணிக்கு, விஸ்வாசம் படத்தில் ஜுக் பாக்சில் இடம்பெறாத ஒரு கிராமியப்பாடலை லஹாரி மியூசிக் நிறுவனம் வெளியிட்டது. 

'நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள,
நெஞ்சை கட்டி இழுக்கும் புள்ள,
சுத்திமுத்தி யாரும் இல்ல தல்லே தில்லாலே
நீ சூசகமா வாடி புள்ளே தல்லே தில்லாலே

கன்னங்கரு கருத்த மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்
மன்னருவா பிடிச்சிருக்கேன் தல்லே தில்லாலே
உன் பாசங்குதான் பலிக்காது தல்லே தில்லாலே

கோட்டாரு தோப்புக்குள்ள
மோட்டாரு ரூமுக்குள்ள
காட்டாறு போல வர்றேன்
தல்லே தில்லாலே
ஒரு கப்பல் ஓட்ட
நீயும் வாடி
தல்லே தில்லாலே என்ற வரிகள் அடங்கிய இந்த பாடல் அருண் பாரதி எழுதி அந்தோனி தாசன் குரலில் தல்லே தில்லாலே  பாடல் தல ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.

இந்த இரண்டு பாடல் லிரிகள் ஒரே நாளில் வெளியாகியது, அஜித்தின் தல்லே தில்லாலே லிரிக்கல் வீடியோ, ரஜினிகாந்த்தின் ஆஹா கல்யாணம் லிரிக்கல் வீடியோவை பின்னுக்குத் தள்ளி மூன்று மடங்கு பார்வையாளர்களை அள்ளியது. ஆஹா கல்யாணம் பாடல் 260,000 பேர் பார்த்துள்ளனர்,18000 பேர் லைக் செய்துள்ளனர். ஆனால், அஜித்தின் தல்லே தில்லாலே லிரிக்கல் வீடியோ பாடல் 680,851 பேர் பார்த்துள்ளனர், 116,800 பேர் லைக் செய்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!