விஷால் அரெஸ்ட் செய்திய தலைப்பு செய்தியா போட்ட தமிழ் ராக்கர்ஸ !! ஓனர் பற்றிய செய்தி போட்ட தைரியம் !!

Published : Dec 21, 2018, 07:13 AM IST
விஷால் அரெஸ்ட் செய்திய தலைப்பு செய்தியா போட்ட தமிழ் ராக்கர்ஸ !!  ஓனர் பற்றிய செய்தி போட்ட தைரியம் !!

சுருக்கம்

தமிழ் திரையுலகில் படம் ரீலீஸ் ஆன அன்றே தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் அதை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தமிழ் ராக்கர்சுக்கு நடிகர் விஷால் தான் ஓனர் என்று செய்தி வெளியானது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க பிரச்சனையில் விஷால் கைது செய்யப்பட்ட செய்தியை தமிழ் ராக்கர்ஸ் தலைப்புக் செய்தியாக வெளியிட்டுள்ளது.

திருட்டு விசிடிக்களை ஒழிக்க வேண்டும் என தமிழ் திரையுலகினர் போராடி வரும் நிலையில், நடிகர் விஷால் இது தொடர்பாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார், பல இடங்களில் ரெய்டு நடத்தி புதுப்பட சிடிக்களை பறிமுதல் செய்தார்.

ஆனால் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் தொடர்ந்து வெவ்வேறு பெயர்களில் புதுப் படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறது. ஆனால் அணைமைக் காலமாக நடிகர் விஷால்தான் தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்… பங்குதாரர் என பல குற்றச்சாட்டுகளும் ,விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் 7 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி  ஒரு தரப்பினர் தயாரிப்பாளர் சங்க கட்டடத்துக்கு பூட்டு போட்டனர். அந்த பூட்டை உடைப்பதற்காக விஷால் தரப்பினர் முயன்றதால், அவரை காவல் துறையினர் கைது செய்து மாலை விடுவித்தனர்.

இந்நிலையில் விஷால் கைது செய்யப்பட்ட செய்தியை தமிழ் ராக்கர்ஸ் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளனர். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வெளியிட்டதன் மூலம் நடிகர் விஷாலுக்கு, தமிழ் ராக்கர்சுக்கும் இடையே  தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்