
உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை 5 :30 மணியளவில், மருத்துவமனையில் உயிர் விட்ட, பிரபல பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் முகத்தை காண, அவருடைய மகள், டெல்லியில் இருந்து மும்பைக்கு 1,400 கிலோ மீட்டர் பயணம் வந்துள்ளார்.
நடிகர் ரிஷிகபூரின் மகள் ரித்திமா,பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மூச்சு திணறல் காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட ரிஷி கபூர் உயிர், திடீர் என சிகிச்சை பலனின்றி பிரிந்தது.
இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அணைத்து விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தன்னை பாராட்டி, சீராட்டி வளர்த்த தந்தையின் முகத்தை ஒரே ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என, டெல்லியில் இருந்து... மும்பைக்கு சுமார் 1400 கிலோ மீட்டர். 19 மணி நேரம் காரிலேயே பயணம் செய்து வந்துள்ளார்.
தந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க, ரிஷி கபூரின் மகள் மேற்கொண்டுள்ள இந்த பயணமும், அவர் தந்தை மேல் வைத்துள்ள பாசமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.