குட்டி பாம்பை கையில் பிடித்து குழந்தை போல் விளையாடும் பிரியமானவள் சீரியல் நடிகை பிரவீனா! என்ன துணிச்சல்!

Published : Apr 30, 2020, 07:45 PM IST
குட்டி பாம்பை கையில் பிடித்து குழந்தை போல் விளையாடும் பிரியமானவள் சீரியல் நடிகை பிரவீனா! என்ன துணிச்சல்!

சுருக்கம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை பிரவீனா. ஒரு அம்மாவாக இவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.  

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை பிரவீனா. ஒரு அம்மாவாக இவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.

பிரியமானவன் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர்.

மேலும் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான கேரளா ஸ்டேட் அவார்டு மற்றும் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான கேரளா அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை  வாங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: தவறான தகவல்.. ரிஷி கபூர் பற்றி நக்மா வெளியிட்ட வீடியோ..! நீக்க சொல்லி கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்!
 

தமிழில் சீரியல் நடிகையாக இவர் அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும், மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும், சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர், யூடியூப் சானலில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அனைவரையும் வியக்க வைத்துள்ளது. விஷ பாம்புகளில் ஒன்றான நல்ல பாம்பின் குட்டியை கையில் வைத்து கொண்டு குழந்தை போல் விளையாடுகிறார்.

மேலும் செய்திகள்: சாவிலும் பாகுபாடா?... ரிஷி கபூருக்கு கூடிய பாலிவுட் பிரபலங்கள் இர்ஃபான் கானை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே...!
 

பாம்பு என்றால் படையே நடுங்கும் என ஒரு பழமொழி உண்டு, அப்படி பட்ட பாம்பை கையில் தைரியமாக வைத்துக்கொண்டு இவர் இந்த வீடியோவில் பேசியுள்ளது அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!