
ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என ஒரு சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களை ஆட்டம் காண வைப்பதில் தல அஜித்திற்கு நிகர் அவர் மட்டுமே. அஜித் பற்றி ஒரு சின்ன தகவல் கிடைத்தாலும் சரி, தல ரசிகர்கள் தனி ஹேஷ்டேக் கிரியேட் செய்து அதை உலக அளவிற்கு ட்ரெண்ட் செய்துவிடுகின்றனர்.
நாளை அஜித்திற்கு பிறந்த நாள் வர உள்ள நிலையில், கடந்த வாரம் முதலே விதவிதமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். பெரும் ரசிகர் படையை வைத்திருக்கும் ஒரு நடிகராகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் கணக்கே இல்லாமல் சமூக வலைதள ட்ரென்டிங்கில் டாப் இடம் பிடித்து சாதனை படைத்து வருகிறார் அஜித்.
இந்நிலையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படம் குறித்து ஏதாவது நல்ல அறிவிப்பு வெளியாகும் என அவரது ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். அதற்காக #WeWantValiAmaiUpdate என்ற ஹேஷ்டேக்கை எல்லாம் உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். ஆனால் ரசிகர்களின் கோரிக்கைக்கு தயாரிப்பாளர் தரப்பு சற்றும் செவி சாய்க்கவில்லை. தற்போது வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கை அஜித் ரசிகர்கள் இதயத்தில் ஈட்டியை பாய்ச்சிவிட்டது.
அந்த அறிக்கையில், "கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம்" என்று தெரிவித்துள்ளார். இதனால் செம்ம கடுப்பான அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரின் ட்விட்டர் பக்கத்தில் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். விதவிதமான மீம்ஸ்களையும் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.