’தேவர் மகன்’ வந்தபோது பொங்காதவர்கள் தேவராட்டத்துக்கு மட்டும் பொங்குவது ஏன்?’...குமுறும் குணச்சித்திர நடிகை...

Published : May 02, 2019, 11:05 AM IST
’தேவர் மகன்’ வந்தபோது பொங்காதவர்கள் தேவராட்டத்துக்கு மட்டும் பொங்குவது ஏன்?’...குமுறும் குணச்சித்திர நடிகை...

சுருக்கம்

‘சாதி வெறி குறித்து கமல் ’தேவர் மகன்’ படத்தை எடுத்தபோது அமைதியாக இருந்தவர்கள்  இப்போது ’தேவராட்டம்’ படத்துக்கு எதிராக ஏன் பொங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் நடிகை மகாலட்சுமி.

‘சாதி வெறி குறித்து கமல் ’தேவர் மகன்’ படத்தை எடுத்தபோது அமைதியாக இருந்தவர்கள்  இப்போது ’தேவராட்டம்’ படத்துக்கு எதிராக ஏன் பொங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் நடிகை மகாலட்சுமி.

நேற்று ரிலீஸான ‘தேவராட்டம்’ படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வழக்கமான முத்தையாவின் படங்களைப்போலவே ஜாதி வெறி பிடித்த படமாக இருப்பதாக வலைதளங்களில் பகிர்ந்து வரும் பலர்  தேவர் ஆட்டம், வன்னியர் ஆட்டம், நாயக்கர் ஆட்டம் என்று அத்தனை ஜாதிகளையும் அடுக்கி இறுதியில் ஒரு தவறான வார்த்தையுடன் அதை முடிக்கிறார்கள்.

இந்தப் பதிவுகளுக்கு கண்டனம் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்ச்சித்திர நடிகையாக நடித்திருக்கும் மகாலட்சுமி. அந்தப் பதிவில் ...படம் எடுப்பது அவர்கள் விருப்பம். அதை பார்ப்பது மக்களின் விருப்பம். தேவர் மகன் படம் எடுத்த காலத்தில் பேசாத மக்கள். இப்போது எது எடுத்தாலும் சாதி பிரச்சினை தூண்டவே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த படத்தில் வர நல்ல விஷயங்களை பார்க்காதீர்கள். தலைப்பு தான் பிரச்சினை யா.அதென்ன ...ராட்டம் என்று பேசுறீங்க. இதே போல் வார்த்தைகள் பேசுவது அநாகரீகமானது என்பது கூட தெரியவில்லை. 

கெட்ட கண்ணோட்டத்துடன் பார்த்தால் அப்படி தான். என்ன என்னமோ எடுக்குறாங்க. என்ன என்னமோ தவறுகள் நடக்கிறது. அப்போது பொதுவாக தட்டிக் கேட்டால் நியாயம். குற்றம் கண்டுபிடித்தே பரிசு பெறும் புலவர்கள் நிறைய இருக்கிறார்கள். யாரையும் யாரும் பேசக்கூடாது என்பதே என் எண்ணம். எல்லா விசயங்களும் பொதுவான பதிவுகள் போடுவது தான் என் வழக்கம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பயங்கரமான அப்டேட் உடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பராசக்தி... டிசம்பர் 18ந் தேதி ரெடியா இருங்க..!
பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்