அஜீத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன இயக்குநர் சேரனைக் கலாய்த்த விஜய் ரசிகர்கள்...

Published : May 02, 2019, 10:16 AM ISTUpdated : May 02, 2019, 10:26 AM IST
அஜீத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன இயக்குநர் சேரனைக் கலாய்த்த விஜய் ரசிகர்கள்...

சுருக்கம்

’ரொம்ப டென்சனாகாதீங்க தம்பிகளா  உங்க தளபதி பிறந்தநாளுக்கும் கூட கண்டிப்பா வாழ்த்து சொல்வேன்’ என்று விஜய் ரசிகர்களுக்கு கூலாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சேரன்.  

’ரொம்ப டென்சனாகாதீங்க தம்பிகளா  உங்க தளபதி பிறந்தநாளுக்கும் கூட கண்டிப்பா வாழ்த்து சொல்வேன்’ என்று விஜய் ரசிகர்களுக்கு கூலாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சேரன்.

மே 1 நேற்று தல அஜீத்தின் பிறந்தநாளுக்கு திரையுலகின் அத்தனை புள்ளிகளும் வாழ்த்து மழையில் நனைத்த நிலையில் இயக்குநர் சேரனும் தன் பங்குக்கு ...எந்தவித பின்னனியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து இன்று தனக்கென ஒரு நிலையான இடத்தை தன் உழைப்பால் பெற்றிருக்கும் நல்ல மனம் கொண்டவரான திரு.அஜித் அவர்களுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...என ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியிருந்தார்.

அஜீத்துக்குக் குவிந்த வாழ்த்துகளால் சற்றே கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் பலரும் சேரனை அஜீத் பட வாய்ப்புக்காக காக்கா பிடிப்பதாக நக்கலடித்திருந்தனர். இது போன்ற கமெண்ட்ஸ்களுக்கு வழக்கமாகப் பொங்கியெழும் சேரன் நேற்று பொறுமையாக, அனைவருக்கும் பொதுவாக...’ரொம்ப டென்சனாகாதீங்க தம்பிகளா  உங்க தளபதி பிறந்தநாளுக்கும் கூட கண்டிப்பா வாழ்த்து சொல்வேன்’பதிலளித்திருந்தார்.

சரி இன்னைக்கு இவரை டென்சனாக்கி குளிர்காய முடியாது போல என்று புரிந்துகொண்ட விஜய் ரசிகர்கள், அடுத்தடுத்து கமெண்ட் போடுவதை நிறுத்திக்கொண்டனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பயங்கரமான அப்டேட் உடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பராசக்தி... டிசம்பர் 18ந் தேதி ரெடியா இருங்க..!
பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்