நடிகை ரேவதி சம்பத் அளித்த புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை ரேவதி சம்பத் அளித்த புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மியூசியம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மலையாள திரைப்படத்துறையில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ரேவதி புகார் அளித்ததை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் தவிர, ரேவதி சம்பத்தை மிரட்டியதாகவும் சித்திக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையின்படி, 2016 ஜனவரி மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள மாஸ்காட் ஹோட்டலில் வைத்து சித்திக் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை, நடிகை ரேவதி சம்பத், சித்திக் மீது பாலியல் துஷ்பிரயோகம் புகார் அளித்தார், அதில் அவர் தன்னை தவறாக நடத்தியதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் விலகினார்.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜை கோடீஸ்வரன் ஆக்கிய வாழை... ஒரே படத்தில் இத்தனை கோடி லாபமா?
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் பொய் என்றும், அது ஒரு சதியின் ஒரு பகுதி என்றும் கூறி, நடிகைக்கு எதிராக சித்திக் பதில் புகார் அளித்துள்ளார். நடிகை முரண்பாடான கூற்றுக்களை கூறி வருவதாகவும், 2018 இல் தான் தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டியதாகவும், பின்னர் துன்புறுத்தல் குறித்து தனது கதையை மாற்றியதாகவும் அவர் வாதிடுகிறார். பாலியல் துஷ்பிரயோகம் குறித்த சமீபத்திய குற்றச்சாட்டு புதியது மற்றும் ஆதாரமற்றது என்று சித்திக் கூறுகிறார்.
சித்திக் தன்னை மகள் என்று அழைத்ததாகவும், ஒரு திரைப்பட வாய்ப்பை உறுதியளித்து தன்னை ஏமாற்றியதாகவும், இறுதியில் தன்னை சீண்டியதாக ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார். தனது நண்பர்கள் சிலரும் சித்திக் மற்றும் துறையில் செல்வாக்கு மிக்க நபர்களுடன் இதேபோன்ற அனுபவங்களைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சித்திக் மீது #MeToo குற்றச்சாட்டுகளை கூறியதாகவும், ஆனால் ஆதரவு இல்லாததால் அதில் தொய்வு ஏற்பட்டதாக சம்பத் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் சித்திக்கின் சமீபத்திய அறிக்கைகள் மீது இளம் நடிகை ரேவதி சம்பத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார், அவர் தனக்கும் மற்றவர்களுக்கும் செய்தது பாலியல் துஷ்பிரயோகம் என்று தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். சித்திக்கின் செயலால் தனது மன ஆரோக்கியத்தில் ஏற்பட்ட கடுமையான தாக்கத்தை அவர் வலியுறுத்தினார் மற்றும் "குற்றவாளிகள்" என்று அவர் விவரித்த நபர்களுக்கு தஞ்சமளித்ததற்காக AMMA அமைப்பையும் ரேவதி சம்பத் விமர்சித்துள்ளார். இதனால் மலையாள திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது. நடிகர் சித்திக் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஷிவானி... பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா?