சரத்குமாருக்காக வேளாங்கன்னி மாதாவை பிராத்திக்கிறேன்! புகழாரம் சூட்டும் மெகா தயாரிப்பாளர்!

By manimegalai a  |  First Published Jun 10, 2023, 9:41 PM IST

நடிகர் சரத்குமார் நடிப்பில் தற்போது வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் 'போர் தொழில்' படத்திற்காக சுப்ரீம் ஸ்டாரை புகழ்ந்து தள்ளியுள்ளார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.
 


தென்னிந்திய அளவில் பிசியான நடிகராக நடித்துவரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் இந்த வாரம் (ஜூன்-9) வெளியாகியுள்ள படம் ‘போர் தொழில்’. 

படம் பார்த்த அனைவருமே படம் குறித்து பாசிடிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்..  குறிப்பாக சரத்குமாரின் நடிப்பு இந்தப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. இந்த நிலையில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதற்கு பெயர்பெற்ற மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்  ‘போர் தொழில்’ படத்தில் சரத்குமாரின் நடிப்பு ரொம்பவே யதார்த்தமாக இருந்தது என பாராட்டியுள்ளார். 

Tap to resize

Latest Videos

அம்மாவுக்காக புதிய வீட்டை இடித்த சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்! என் தெரியுமா?

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவிலேயே யதார்த்தமாக நடிக்கும் சில நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். அவர் தொடர்ந்து இதுபோன்ற அருமையான படங்களில் நடிக்கவேண்டும் என வேளாங்கண்ணி அன்னையை பிராத்திக்கிறேன்” என பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சரத்குமாருக்கு  தெரிவித்துள்ளார் K.T.குஞ்சுமோன்.

இது நம்ப லிஸ்டுலையே இல்லையே! லியோ படத்தில் இணைந்த தனுஷ் பட ஹீரோயின்? வெளியான ஆச்சர்ய தகவல்!

நடிகர் சரத்குமார் தமிழ்சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் அவரிடம் இருந்த திறமையைக் கண்டு அப்போதே அவரை ஊக்குவித்தவர் தான் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன். அவரது தயாரிப்பில் வெளியான ‘வசந்த கால பறவை’, ‘சூரியன்’ ஆகிய வெற்றி படங்கள் குறுகிய காலத்தில் சரத்குமாரை தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் குஞ்சுமோன் ஜென்டில் மேன் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!