Ajithkumar : 20 ஆண்டுகள் ரசிகர்களின் மந்திர சொல்லாக இருந்த ‘தல’.... அஜித் அப்படி அழைக்கப்பட்டதன் உண்மை பின்னணி

By Ganesh PerumalFirst Published Dec 1, 2021, 3:52 PM IST
Highlights

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தீனா படத்துக்கு பின்னர் தான் அஜித்தை தல என அடைமொழிவைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் மிகவும் முக்கியமானவர் அஜித். பொதுவாகவே மாஸ் ஹீரோக்களுக்கு அடைமொழி வைத்து அழைப்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அதன்படி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்றும், விஜய்யை தளபதி என்றும், கமலை உலக நாயகன் என்றும் அழைப்பது போல் நடிகர் அஜித்தையும் ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் அழைத்து வந்தனர். 

இவற்றையெல்லாம் கடந்து ரசிகர்கள் அவருக்கு செல்லமாக வைத்த தல என்ற அடைமொழி தான் இன்றளவும் மனதில் நிலைத்து நின்றது என்றே சொல்லலாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தீனா படத்துக்கு பின்னர் தான் அஜித்தை தல என அடைமொழிவைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

அப்படத்தில் நடிகர் அஜித்தை, மகாநதி சங்கர் தல என்றே அழைப்பார். இதையடுத்து தான் ‘தல அஜித்’ என ரசிகர்கள் அவரை செல்லமாக அழைக்கத் தொடங்கினர். தல என அஜித்தை அந்த படத்தில் அழைத்ததற்கு பின்னணியில் ஒரு உண்மை சம்பவம் ஒளிந்திருக்கிறது. இதனை ஏ.ஆர்.முருகதாஸே ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

அது என்னவெனில், தீனா படம் உருவான சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் நண்பர் ஒருவர், சென்னைல அவருடைய ஏரியால இரு கொலைய பார்த்ததா சொன்னாராம். அந்த கொலையை செய்த கொலைகார கும்பல் தலைவனை அவரது சகாக்கள் தல என அழைத்ததாக அவர் முருகதாஸிடம் சொல்லி இருக்கிறார். 

இதைக் கேட்டதும் தீனா படத்தில் அஜித்துக்கு கிட்டத்தட்ட அதே கதாபாத்திரம் தான் என்பதால், அவரை தல என அழைக்கும்படி காட்சி படத்தில் வைத்ததாக தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்த ‘தல’ என்ற பெயரை இனி பயன்படுத்த வேண்டாம் என நடிகர் அஜித் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

click me!