
அதைத் தொடர்ந்து, பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ராசி கண்ணா, 'வில்லன்' படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படியே, தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பிய அவர், 'இமைக்கா நொடிகள்' படத்தில் அறிமுகமாகி, 'அடங்கமறு', 'அயோக்யா', 'சங்கத்தமிழன்' என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமாகியுள்ளார்.
எனினும் தெலுங்கில் மட்டுமே அதிக படவாய்ப்புகள் வந்ததால் ஐதராபாத்தில் சொந்தமாகவே பிளாட் ஒன்றை வாங்கி தங்கியிருந்தார் ராசி கண்ணா. அங்கிருந்துதான் பெரும்பாலும் ஷுட்டிங்கிலும் பங்கேற்று வந்தார்.தற்போது, தெலுங்கில் அவர் நடித்துள்ள 'வெங்கி மாமா' படம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது.
இதனையடுத்து, 'பிரதி ரோஜூ பண்டகே', 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' ஆகிய படங்கள் மட்டுமே ராசி கண்ணா கைவசம் உள்ளன. மேற்கொண்டு படங்கள் எதுவும் புக் ஆகாததால், தெலுங்கில் தனக்கு மார்க்கெட் குறைந்து வருவதை உணர்ந்த அவர், மும்பைக்கு சென்று பாலிவுட் படங்களை கைப்பற்ற முடிவு செய்துள்ளார்.
எனவே, தனது ஐதராபாத் பிளாட்டை காலி செய்துவிட்டு மும்பைக்கு பறந்துவிட்டாராம் ராசி கண்ணா. தற்போது அந்த வீட்டை தெலுங்கு குடும்பம் ஒன்றிற்கு வாடகைக்கு விட்டிருக்கிறாராம்.
இதனால் அவரது தெலுங்கு ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.2013ம் ஆண்டு வெளியான 'மெட்ராஸ் கபே' படத்திற்கு பிறகு, அவர் வேறு எந்த இந்தி படத்திலும் நடிக்கவில்லை. ஆகையால்தான், மீண்டும் இந்தி திரையுலகில் கவனம் செலுத்தவே இந்த முடிவை ராசி கண்ணா எடுத்திருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.