
முன்பெல்லாம், படம் துவங்கும் போதே... படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் பழக்கம் இருந்தது. ஆனால் சமீப காலமாக, படத்தின் டைட்டில், மற்றும் ஃபர்ஸ்ட்லுக், ஆகியவற்றை ரகசியமாக வைத்திருந்து, படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் முடிவடைந்த பின்பே வெளியிடுகின்றனர்.
இந்த வழக்கத்தை, பல முன்னணி நடிகர்கள் கடைபிடித்து வருகிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் வெளியாவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது நடிகர் கார்த்தியுடன் நடித்து வரும் படத்தில் டைட்டில் பற்றி, ரசிகர் ஒருவர் எதார்த்தமாக கேட்க இவரும் பதார்தமாக பதில் சொல்லி, படத்தின் டைட்டில் "சுல்தான்" என கூறியுள்ளார்.
இந்த தகவல் படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்ததோடு, இவர் மீது செம்ம கோபத்தையும் வரவைத்துள்ளது. மேலும் ராஷ்மிகா தன்னுடைய தவறை உணர்ந்து, வருத்தத்தை தெரியப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராஷ்மிகா தன்னுடைய முதல் தமிழ் படத்தையே, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் ஆகியோர் இசையமைத்து வருகிறார்கள். பல தரமான கதைகளை இயக்கி குறுகிய காலத்தில் பிரபல தயாரிப்பாளராக அனைவராலும் அறியப்படும் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.