சென்னையில் வீதி வீதியாக ஆட்டோ ஓட்டி வந்தவர் ஒரு இயக்குநராக ஜெயித்த கதை...

Published : Aug 20, 2019, 04:11 PM IST
சென்னையில் வீதி வீதியாக ஆட்டோ ஓட்டி வந்தவர் ஒரு இயக்குநராக ஜெயித்த கதை...

சுருக்கம்

சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் துவங்கி, நடிகராக பல அவதாரங்கள் எடுத்து முடித்து தற்போது இயக்குநராக புரமோஷன் பெற்றுள்ள போஸ் வெங்கட்,’இயக்குநர் அவதாரம்தான் தனது நீண்ட காலக் கனவு என்று அதைத் தொட்டுப்பிடித்திருப்பதில் மகிழ்ச்சி’ என்கிறார்.

சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் துவங்கி, நடிகராக பல அவதாரங்கள் எடுத்து முடித்து தற்போது இயக்குநராக புரமோஷன் பெற்றுள்ள போஸ் வெங்கட்,’இயக்குநர் அவதாரம்தான் தனது நீண்ட காலக் கனவு என்று அதைத் தொட்டுப்பிடித்திருப்பதில் மகிழ்ச்சி’ என்கிறார்.

‘மெட்டி ஒலி’போஸ் என்று பரவலாக அறியப்பட்ட போஸ்வெங்கட் பாரதிராஜாவால் ‘ஈர நிலம்’படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர். அவர் அதற்கு முன்பு சென்னையில் வீதி வீதியாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவர் என்பது இன்றைக்குத் திரையுலகில் அவருடன் பயணைக்கும் பலருக்கே தெரியாது. தற்போது ‘கன்னி மாடம்’படத்தின் மூலம் தனது லட்சியமான சினிமா இயக்குநர் அந்தஸ்தை எட்டியுள்ளார்.

தனது முதல் படமான ‘கன்னிமாடம்’ ஃபர்ஸ்ட் லுக் பற்றிப் பேசிய அவர்,”இப்படத்தின் டிசைன்ஸ் பார்பதற்கு தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு நாங்கள் சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கன்னி மாடம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்துள்ளது. அதனை கொண்டு சேர்த்த பத்திரிகை ஊடகத்தினருக்கும், சமூக வலைத்தள ஊடகத்தினருக்கும் மேலும் இதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த “கன்னி மாடம்”.நான் இதற்கு முன் சொன்னதுபோல், பெண்களுக்கு அசாத்தியமான கோட்டையாக இருப்பது பற்றிய சாண்டில்யனின் கன்னி மாடம் என்ற சரித்திர நாவல் தான் இதற்கு தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த கன்னி மாடம் என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது. மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றிவைத்தனர். சில இடங்களில், பெண்கள் பருவ வயதை அடையும் அவர்களை நேரத்தில் கட்டாயப் வீட்டுக்குளே இருக்க வைக்கின்றனர். அந்த நேரத்தில் கன்னி மாடத்தின் விளக்கு ஏற்றப்படும். என்று படத்தலைப்பு விளக்கம் கூறினார்.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!