
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ரஷ்மிகா மந்தனா. தமிழ் தெலுங்கு என மிகப்பெரிய வெற்றியை தட்டி சென்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கி படு பிஸியான ரஷ்மிகா டியர் காம்ரேட், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. அதோடு ஹிந்தியில் மிஷன் மஜ்னு நடித்துள்ளார்.
முன்னதாக ரஷ்மிக்காவுக்கும் கன்னட நடிகர் ரஷீத் ஷெட்டிக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஷ்மிகாவிடம் உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா என கேட்கப்பட்ட பதில் அளித்த அவர்; காதலுக்கு மொழியும், வயதும் தடையில்லை என திரட்டி பதிலை கொடுத்துள்ளார். மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் நம் எண்ணங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாத நபராக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் இருந்தால் போதும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் எல் சட்டை இல்லாமல் ரஷ்மிகா வெளியிட்ட புகைப்படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ; நன்றாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதை தான் பாராட்டுவதாகவும்,. அது நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால், அதை ஏன் ப்ரொபைல் படமாக வைக்க விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.