
தமிழ் சினிமாவாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா, நடிகர் சூர்யாவிற்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அவரை தான் திருமணம் செய்து கொண்டிருப்பேன் என கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா பிரபல நடிகர் என்பதையும் தாண்டி, மனைவி ஜோதிகாவை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் அன்பான கணவர். தன்னுடைய குழந்தைகளுக்கு சிறந்த அப்பா, என்பது பலரும் அறிந்ததுதான்.
மேலும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டே... சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இமைக்கா நொடிகள், அடங்காமாறு, என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை ராஷி கண்ணா, நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்த 'அயோக்கியா' படம் இன்று வெளியாக இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் வெளியாகவில்லை.
இந்த படத்தின் பிரமோஷனுக்காக பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது தமிழ் சினிமாவில் எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சற்றும் தயக்கமின்றி நடிகர் சூர்யாவிற்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அவரை தான் திருமணம் செய்து கொண்டிருப்பேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கு காரணம் சூர்யா ஜோதிகாவை பார்த்துக் கொள்ளும் விதம் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என படக்கென பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.