தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயின் பர்சனல் லைப் மிகவும் சோகம் நிறைந்தது இவரது ஒரே தங்கையான வித்யா சிறு வயதிலேயே உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.. இந்த சென்டிமெண்டின் காரணமாகவே விஜய் சிஸ்டர் செண்டிமெண்ட் படங்கள் என்றால் உற்சகமாக நடிப்பதாக கூறப்படுகிறது..
கடந்த 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி சென்னையில் பிறந்த விஜய்யின் இயற்பெயர் ஜோசப் விஜய். இவரது தந்தை சந்திரசேகர். இவர் ஒரு திரைப்பட இயக்குனர். தாயார் ஷோபா. இவர் ஒரு பின்னணி பாடகி மற்றும் கர்நாடக பாடகியும் கூட. இவர்களுக்கு விஜய், வித்யா என சிறுபிள்ளைகள்..இதில் வித்யா 2 வயதில் இறந்துவிட்டார். அவரது மரணம் விஜய்யை வெகுவாக பாதித்தது. சிறு வயதில், திறமையாக பேசி, குறும்புத்தனம் செய்த விஜய், வித்யாவின் மரணத்திற்கு பிறகு அமைதியாகிவிட்டார் என்று ஷோபா குறிப்பிட்டுள்ளார். வித்யாவின் கதை 2005ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கை மரணத்திற்கு பிறகு மிகவும் தனிமையை உணர்ந்த விஜயை தேற்றவே சந்திரசேகர் மகனை அக்டிங்க் பக்கம் திரும்பியுள்ளார் . இருந்தும் பள்ளி கல்லூரி என குறிப்பிட்ட சில நண்பர்களுடன் மட்டும் பழகிய விஜய் மவனித்தே இருந்துள்ளார்..
பின்னர் படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி ஹாலிவுட்டை ஒரு ரவுண்டு வந்தாலும், ரொமாண்டிக்,ஆக்சனை விட விஜய்க்கு தங்கை செண்டிமெண்ட் பலமாக கைகொடுத்துள்ளது என்றே சொல்லலாம்..தங்கை பாசத்தை மையக்கருவாக கொண்டிருக்கும் படங்களில் விஜய் நடித்தால் சூப்பர்ஹிட் தான்.
திருப்பாச்சி, சிவகாசி, வேலாயுதம், கில்லி, ஜில்லா போன்ற படங்களில் தங்கைக்காக இவர் நடித்திருந்த காட்சிகளில் ரசிகர்கள் மனதை விட்டு இன்று நீங்க இடத்தை பிடித்துள்ளது. இது போன்ற தங்கை செண்டிமெண்ட் கடசிகளின் போது தனது தங்கையை நினைந்தே விஜய் நடிப்பதாக தெரிகிறது...அதன்காரணமாகவே விஜய் மிகவும் தத்துருவமாக நடிக்கிறார்...தங்கைக்கு பாதிப்பு என்றதும் விஜயின் நடிப்பு உண்மையவிடுகிறது..இது ரசிகர்களின் கண்களில் கட்டாயம் கண்ணீரை வரவழைத்து விடும்...
இந்நிலையில் விஜய் அவரது தங்கையுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது..இதில் விஜயும் வித்யாவும் மாலை அணிவித்து நிற்கின்றனர். எதோ ஒரு குடும்ப விஷயத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.. இது தற்போதும் பலராலும் பார்க்கப்பட்ட பிரபல புகைப்படமாக வைரலாகி வருகிறது..