
பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு 1983 ஆம் ஆண்டு சூர்யன் திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். பின்னர் பிலிப்ஸ் அண்ட் த மங்கி பென், பெருச்சாழி, ஆடு , முத்துகவு, ஆடு 2 மற்றும் ஹோம் ஆகிய படங்களைத் தயாரித்து நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். இவர் ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபலமான படங்களை தயாரித்து மலையாளி ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜய் பாபு.
இவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம் பெண் ஒருவரை எர்ணாகுளத்தில் உள்ள தனது குடியிருப்பில் விஜய் பாபு பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இம்மாதம் 22ஆம் தேதி அந்த பெண் விஜய் பாபு மீது போலீசில் புகார் அளித்தார். விஜய் பாபுவிடம் போலீசார் இன்னும் விசாரிக்கவில்லை என தெரிகிறது. விஜய் பாபு மீது பாலியல் பலாத்காரம் மற்றும் உடல் உபாதை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விவரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.