முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு.. கடுப்பான நீதிபதி.. நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Apr 26, 2022, 8:17 PM IST
Highlights

நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டு சமூகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வழக்குபதிவு செய்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில்,” ஆடியோ பதிவிட்ட நாளில் தான் வேறு ஒரு நிகழ்வில் இருந்தேன். என் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ஓவ்வொருவரின் மீதும் அவதூறான உண்மைக்கு புறம்பான கருத்துகளை தொடர்ச்சியாக பதவிடுவதை வழக்கமாக இவர் வைத்துள்ளார் என்றும் ஏற்கனவே பட்டியலின வகுப்பை சேர்ந்தவரை தரைகுறைவாக பேசிய வழக்கில் கைதாகியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, நடிகை மீரா மிதுனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சரை குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்ட குறித்து அவரை விரைவில் கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் சமூக வலைதளங்களில் உள்ள அந்த பதிவை நீக்கவும் உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது.

click me!