பட புரமோஷனுக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் ராணி...

 
Published : Jan 12, 2018, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
பட புரமோஷனுக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் ராணி...

சுருக்கம்

rani mukarji around the world for movie promosion

பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது படத்தின் புரமோஷனுக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி'  என கமலுடன் ஹேராம் படத்தில் டூயட் பாடியவர் தான் பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி.

1997 ம் ஆண்டு 'ராஜா கி ஆயேகி பாரத்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிய ராணி. 'குச் குச் ஹோத்தா ஹை' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 

21 ஆண்டுகளாக பல தோல்விகளை சந்தித்தாலும்  தனது அசத்தலான நடிப்பால் இன்னும் பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது  ராணி முகர்ஜி, 'ஹிச் கி' என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ராணி, இத்திரைப்படத்தில் டுரைட்ஸ் என்ற நோயால் பதிக்கப்பட்ட,  நைனா மாதூர் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். டுரைட்ஸ் என்பது நரம்பு மண்டலம் சார்ந்த நோயாகும். ஹிக்கி ஓராட் கோஹன்னின் புகழ்பெற்ற ஹால்மார்க் சுயசரிதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி 23 ம் தேதி திரைக்கு வர உள்ள 'ஹிச் கி' படத்தை 2 மாதங்களுக்குள் உலகம் முழுவதும் பயணம் செய்து விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கிறார் ராணி.

அதன்படி பத்து  நகரங்களுக்குள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், மற்றும் குழந்தைகளிடம் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார். 

தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!