பதவி விலகியதும் கார்த்தியால் அவமானப்படுத்தப்பட்ட எஸ்.வி.சேகர்..! 

 
Published : Jan 11, 2018, 07:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
பதவி விலகியதும் கார்த்தியால் அவமானப்படுத்தப்பட்ட எஸ்.வி.சேகர்..! 

சுருக்கம்

sv sekar disgraced by karthi

பதவி விலகல்:

நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் நடிகர் எஸ்.வி.சேகர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வகித்து வந்த அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மூத்த நடிகர்களுக்கு தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் மரியாதை கொடுக்காமல் நடத்தியதாகவும், நடிகர் சங்கத்தால் மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர்கள் பலர் விமான நிலையம் வரை சென்று மீண்டும் திரும்பச் சென்றதாகவும் கோபமாகக் கூறியிருந்தார்.

எஸ்.வி.சேகர் பேட்டி:

மேலும் இது பற்றி, எஸ்.வி சேகர் ஏசியா நெட் செய்தியாளருக்குக் கொடுத்த பிரத்யேகப் பேட்டியில்... நடிகர் சங்கத்தைப் பற்றி போகிற போக்கில் எல்லாம் தன்னால் குறை கூற முடியாது அப்படிக் கூற நான் பொறம்போக்கு இல்லை. மூத்த நடிகர்களை அவர்கள் அவமானப்படுத்துவது போல் நடந்துகொண்டது நிஜம் என அடித்துக் கூறினார். 

ஏற்கனவே நடிகர் பொன்வண்ணன், துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியபோது... அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் சமாதனம் பேசி மீண்டும் அவரை பதவி ஏற்றுக்கொள்ள வைத்தவர்கள், உங்களிடம் பதவி விலகியது குறித்து பேச்சு வார்த்தை நடத்தவில்லையா என செய்தியாளர் கேட்டபோது.

கார்த்தியால் பட்ட அவமானம்:

அதற்கு பதில் அளித்த எஸ்.வி.சேகர், நான் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்கிற தகவலை வாட்ஸ் ஆப் குரூப்பில் தெரியப் படுத்தியவுடன், முதல் வேலையாக நடிகர் கார்த்தி என்னை அந்த குரூப்பில் இருந்து விலக்கினார் எனக் கூறியுள்ளார்.

கார்த்தி என்னை வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து விலக்கியதில் காட்டிய வேகத்தை நடிகர் சங்க செயல்பாட்டில் காட்டினால் சங்கமாவது முன்னேறும் என தெரிவித்தார் எஸ்வி.சேகர்.

எஸ்.வி சேகர் ஒரு மூத்த கலைஞர் என்று கூட மதிக்காமல், கார்த்தி செய்தது அவரை அவமானப்படுத்தச் செய்தது என்று தான் பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!