தற்போது இவர் சுடிதார் அணிந்து கொடுத்திருக்கும் போஸ்கள் வைரல் ஆகி வருகிறது.
திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட ரம்யா பாண்டியன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இன்ஜினியரிங் இளங்கலை பட்டத்தை முடித்த இவர் பணிபுரியும் காலத்தில் மானே தேனே பொன்மானே என்கிற குறும்படத்தின் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானர். இதன் மூலம் பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனரான ஷெல்லியுடன் இவருக்கு பணி புரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன்னதாக பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகரன் என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. தொடர்ந்து மிகவும் குறைந்த பட்ஜெட்டான டம்மி டப்பாசு மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனார். படம் வெளிவராத போதிலும் அவரை ராஜமுருகனிடம் பரிந்துரை செய்துள்ளது ரா ரா ராஜசேகரன் குழுவினர்.
மேலும் செய்திகளுக்கு...லண்டனில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’ - அருண் விஜய் - ஏ.எல்.விஜய் இணையும் மாஸ் பட டீசர் இதோ
ஜோக்கர் படத்தில் ஒப்பந்தமான ரம்யா பாண்டியன் தனது கிராமத்து பெண் வேடத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார். இதனை கண்ட சமுத்திரகனி அவருக்கு ஆண் தேவதை என்னும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அந்த படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். நடிப்பின் ஆரம்பத்தில் இரு பிள்ளைகளுக்கு தாயாக வருவது குறித்த எந்த அச்சமும் கொள்ளாமல் தனது நடிப்பை பிரதிபலித்த இவருக்கு குக் வித் கோமாளி மிகச்சிறந்த அடையாளத்தை கொடுத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான இதில் புகழுடன், ரம்யா பாண்டியன் கம்போ ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மிகவும் அமைதியான ஒருவராக வலம் வந்து ரசிகர்களின் நல்லாதரவை பெற்ற ரம்யா பாண்டியன். இரண்டாவது ரன்னரப்பாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு zee 5 ல் ஒளிபரப்பான முகிலன் என்ற வெப் தொடரில் நாயகியாக நடித்த பின்னர் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்னும் படத்தில் வீராயீ என்கிற கிராமப்புற வேடம் தரித்து பல விருதுகளையும் பெற்றிருந்தார்.
போயஸ் கார்டனில் நடந்த சமரச பேச்சுவார்த்தை... ரஜினி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயத்தால் மனம் மாறிய தனுஷ்..!
ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்கள்ஒப்பந்தமாகி நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வரும் ரம்யா பாண்டியன், முன்பைவிட தற்போது அதிக கவர்ச்சியை காட்டி வருகிறார். அதன்படி முன்னதாக இடுப்பழகு தெரியும்படி சேலையில் இவர் கொடுத்திருந்த போட்டோக்கள், பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் வரையில் அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றிருந்தது. தற்போது இவர் சுடிதார் அணிந்து கொடுத்திருக்கும் போஸ்கள் வைரல் ஆகி வருகிறது.