வித்தியாசமான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஃபர்ஹானா! படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்!

Published : Oct 05, 2022, 07:50 PM IST
வித்தியாசமான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஃபர்ஹானா! படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்!

சுருக்கம்

மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அடுத்த படத்தினை அறிவித்துள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.  

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என வித்தியாசமான கதைகளங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், 'ஃபர்ஹானா'. கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் முத்திரை பதித்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக சிவசங்கர் பணியாற்றியுள்ளார். 

மேலும் செய்திகள்: ஹீரோயின்களை மிஞ்சும் அழகு! மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து திருமணம் குறித்து பகிர்ந்து கொண்ட ஹரீஷ் கல்யாண்!
 

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 7-ம் தேதி ஃபர்ஹானா படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த தகவலை ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான போஸ்டருடன், படக்குழு வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ..! என்ன ஆனது? அவரே கூறிய தகவல்!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!