ஹரீஷ் கல்யாண் தற்போது தனக்கு திருமணம் முடிந்து விட்ட தகவலை அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஹரீஷ் கல்யாண் இன்று காலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், பெண் ஒருவரின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புதிய துவக்கம் என கூறி இருந்த நிலையில், இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதை தெரிவிக்கும் விதமாகவே ஹரீஷ் கல்யாண், இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது தனக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதாக கூறி மனைவியுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதே போல் ஹரீஷ் கல்யாண் தரப்பில் இருந்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுளளதாவது... "என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே, எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும், ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு வரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மையில் கல்லையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.
மேலும் செய்திகள்: திடீர் என மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகை குஷ்பூ..! என்ன ஆனது? அவரே கூறிய தகவல்!
இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள் பத்திரிக்கை நண்பர்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் செய்திகள்: மாலத்தீவில் ரொமான்ஸில் மல்லு கட்டும் ஷ்ரேயா - சித்து..! காதல் பொங்க... பொங்க... வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!
எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும், இந்த புதிய வாழ்க்கை பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும், இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். என கூறி அன்புடன் ஹரிஷ் கல்யாண் என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையுடன் மனைவி நர்மதாவுடன் மிகவும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். திடீர் என திருமணம் குறித்து அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள ஹரீஷ் கல்யாணுக்கு பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்