ஆபாச பட நாயகியான ரம்யா கிருஷ்ணன்... நடுங்கி ஓடிய நதியா..!

Published : Jan 18, 2019, 02:58 PM IST
ஆபாச பட நாயகியான ரம்யா கிருஷ்ணன்... நடுங்கி ஓடிய நதியா..!

சுருக்கம்

நடிப்பில் பல பரிமானங்களில் ஜொலித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுத்து ஆபாச பட நாயகியாக நடிக்க உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடிப்பில் பல பரிமானங்களில் ஜொலித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுத்து ஆபாச பட நாயகியாக நடிக்க உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாசப் பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார். ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு குமாரராஜா தியாகராஜன் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார். 2019ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. குமாரராஜா தியாகராஜவின் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறுது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்தப்படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்து வருகிறாராம். ஏற்கெனவே இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டார். அதனைத் தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

’’ஆபாச நடிகை கேரக்டர் என்றாலும் எல்லை தாண்டாத கவர்ச்சியில் தான் ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார். அவருடைய கேரக்டருக்கு பின் ஒருவிதமான அழுத்தமும் சஸ்பென்ஸும் இருப்பதால் இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் ஏன் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்’’ என்று இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Samantha : சேலையில் வடிவாக வசீகரிக்கும் அழகு.. நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்..!!
Actress Shalini Pandey : பார்த்ததும் கிறங்கடிக்கும் கிளாமர்.. 'இட்லி கடை' நாயகி ஷாலினி பாண்டேவின் வேற மாதிரி போட்டோஸ்..!!