33 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சின்ன வீடு செட் அப்பில் இறங்கும் பாக்யராஜ்...

By Muthurama LingamFirst Published Jan 18, 2019, 1:39 PM IST
Highlights


வயது 65 ஆகிவிட்டாலும் முருங்கைக்காய் சமாச்சாரத்தில் இன்னும் முழு ஃபார்மில் இருக்கும் இயக்குநர் பாக்கியராஜ், ‘சின்னவீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

வயது 65 ஆகிவிட்டாலும் முருங்கைக்காய் சமாச்சாரத்தில் இன்னும் முழு ஃபார்மில் இருக்கும் இயக்குநர் பாக்கியராஜ், ‘சின்னவீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

1979ல் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் . பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளை பெற்றவர். பின்னர் தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்த அவர், தனது மகனை வைத்து ‘பாரிஜாதம்’ படம் இயக்கி பெரும்தோல்வி அடைந்தார். அவரது இயக்கத்தில் ‘சித்து பிளஸ்-2’ படம் 2010-ல் வெளிவந்தது. இதிலும் அவரது மகன் சாந்தனுவே கதாநாயகனாக நடித்து இருந்தார்.இப்படமும் படுதோல்வி.

 சித்தோடு தனது டைரக்‌ஷன் ஆசையை மூட்டைகட்டி வைத்திருந்தவர், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். சின்ன வீடு படம் 1985-ல் வெளியானது. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். ஊர்வசியின் அக்காள் கல்பனா கதாநாயகியாக நடித்து இருந்தார். அனு இன்னொரு நாயகியாக வந்தார்.

விருப்பம் இல்லாமல் குண்டான பெண்ணை மணந்து தவிக்கும் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த படம் மையப்படுத்தி இருந்தது. சின்ன வீடு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்..

தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பாக்யராஜே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. படத்துக்கான திரைக்கதையை தயார் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 65 வயசுலயும் சின்னவீடு செட் அப் பண்ண நினைக்கிறீங்களே நல்லாவா இருக்கு பாக்யராஜ் சார்?

click me!