சொன்னதை செய்த கமல்! "இந்தியன் 2 " படப்பிடிப்பு ஆரம்பமானது!

Published : Jan 18, 2019, 01:21 PM IST
சொன்னதை செய்த கமல்! "இந்தியன் 2 " படப்பிடிப்பு ஆரம்பமானது!

சுருக்கம்

உலக நாயகன், கமல்ஹாசன்  மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  

உலக நாயகன், கமல்ஹாசன்  மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனால் "இந்தியன்"  படத்தைத் தொடர்ந்து, தற்போது இந்த படத்தின், இரண்டாம் பாகம் இன்று மிகப் பிரமாண்டமாக தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நடத்தவேண்டிய இடங்களையும் சங்கர் தேர்வு செய்து வைத்திருந்தார்.

மேலும் கமல்ஹாசனும் தனது தோற்றத்தை மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்தார். இதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் , கமலின்  தோற்றத்தை மாற்றி புகைப்படங்கள் எடுத்தனர்.

தற்போது அனைத்து பணிகளும் முடிந்து,  படக்குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளனர். ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கும் என ஒருமுறை கூறி படப்பிடிப்பு தேதி, தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்ட தேதியில் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல் சொன்னது போல் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இதற்காக, சென்னையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து உள்ளனர் படக்குழுவினர்.  கமலஹாசன் இரண்டு, மூன்று,  மாதங்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக கலந்து கொள்கிறார். 

கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நடிகர் சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில்  கமலஹாசன் வயதான தோற்றத்தை வர்மக்கலையின் குறியீட்டுடன் படக்குழுவினர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். 

இந்தத் தோற்றம் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதல் பாகத்தில் கமலஹாசன் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தண்டிப்பது போல், காட்சிகள் இருந்தன. இரண்டாம் பாகத்திலும் சண்டைக்காட்சிகள் வர்மக் கலையை மையப்படுத்தி அமைத்துள்ளார் இயக்குனர். இது முழுமையான அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வா வாத்தியார் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்... இம்முறையாவது ரிலீஸ் ஆகுமா...?
முதன்முறையாக வீட்டு தலை ஆன கானா வினோத்... இந்த வார பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார் தெரியுமா?