ஏகப்பட்ட போட்டிக்கு நடுவே மற்றுமொரு ஜெயலலிதா - சசிகலா வாழ்க்கை படம்!

Published : Apr 07, 2019, 02:53 PM ISTUpdated : Apr 07, 2019, 03:06 PM IST
ஏகப்பட்ட போட்டிக்கு நடுவே  மற்றுமொரு ஜெயலலிதா - சசிகலா வாழ்க்கை படம்!

சுருக்கம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பல்முனை போட்டி நிலவி வருகிறது.  

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பல்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் 'சசி லலிதா' என்கிற பெயரை  ஜெயலலிதா - சசிகலா வாழ்க்கை படம் உருவாகஉள்ளதாக அறிவித்து இது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்துள்ளது. 


நடிகையும், முதலமைச்சருமான ஜெயலலிதா இறந்தது முதலே, பலர் இவருடைய வாழ்க்கையை படமாக்க முயற்சித்து வருகிறார்கள். பிரபல இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதா குறித்த ஒரு படம் இயக்க உள்ளதாக தெரிவித்தார்.  ஆனால் அவரின் படம் குறித்து எந்த தகவலால் இதுவரை வெளியாக வில்லை.

அதே போல் பிரபல இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி 'அயன் லேடி' என்கிற பெயரில் ஜெ.வாழக்கையை படமாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக நடிகை நித்தியா மேனனும், சசிகலாவாக வரலட்சுமியும் நடித்து வருகிறார்கள். 

மேலும் இயக்குனர் ஏ.எல் விஜய் 'தலைவி' என்கிற பெயரில் ஜெ.வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். 

இவர்களை தொடர்ந்து, சர்ச்சை இயக்குனராக அனைவராலும் அறியப்பட்ட பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா 'சசிகலா' என்கிற பெயரில் ஜெயலலிதா மற்றும் சசிகலா வாழ்க்கை பற்றிய படம் உருவாக உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்து கடந்த வாரம் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார். 

இந்நிலையில் இயக்குனர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி என்பவர் தயாரிப்பில் 'சசி லலிதா' என்கிற படம் உருவாக உள்ளதாக தெரிவித்து இது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!