”பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பரவாயில்லை எங்க கூட்டணிக்கே ஓட்டுபோடுங்க”...பிரேமலதாவின் உச்சக்கட்ட உளறல்...

Published : Apr 07, 2019, 01:00 PM IST
”பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பரவாயில்லை எங்க கூட்டணிக்கே ஓட்டுபோடுங்க”...பிரேமலதாவின் உச்சக்கட்ட உளறல்...

சுருக்கம்

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகமாக உளறிக்கொட்டுபவர்கள் என்கிற பட்டியலில் அ.தி.மு.க. அமைச்சர்களைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார் கேப்டன் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க. பொருளாலருமான பிரேமலதா.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகமாக உளறிக்கொட்டுபவர்கள் என்கிற பட்டியலில் அ.தி.மு.க. அமைச்சர்களைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார் கேப்டன் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க. பொருளாலருமான பிரேமலதா.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு, வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.  

தேர்தல் தேதி மிகவும் நெருங்கிவரும் சூழ்நிலையில் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அனைத்துக்கட்சி வேட்பாளர்களுமே கட்சிச் சின்னங்கள், வேட்பாளர்கள் பெயர்கள் உட்பட அனைத்திலுமே பெருங்குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் பிரேமலதா இரட்டை இலை சின்னத்துக்குப் பதில் பல இடங்களில் முரசு சின்னத்துக்கே ஓட்டுக் கேட்கிறார். இதேபோல், அண்மையில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரை அருகில் வைத்துக்கொண்டே ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்' எனக் கூறி சர்ச்சைய கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா, பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்பது போல் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இவரது அந்த சர்ச்சைப் பேச்சை எதிர்க்கட்சிகளில் வலைதளங்களில் ஏற்றி வைரலாக்கிவருகிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க k-drama பிரியரா? மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய சீரிஸ்! Netflixல் இருக்கு
Pushpa 2 Japan : ஜப்பானில் காத்து வாங்கிய அல்லுவின் படம்.. இதுதான் காரணமா? முழு தகவல் உள்ளே