சிவகார்த்திகேயனை உசுப்பேற்றி, தனுஷை டர்ர்ராக்கும் ராம்சரண்..! சிரஞ்சீவி மகனின் தரமான ‘நாரதர் வேலை’..!!

Published : Jan 04, 2022, 08:42 AM ISTUpdated : Jan 04, 2022, 08:46 AM IST
சிவகார்த்திகேயனை உசுப்பேற்றி, தனுஷை டர்ர்ராக்கும் ராம்சரண்..! சிரஞ்சீவி மகனின் தரமான ‘நாரதர் வேலை’..!!

சுருக்கம்

தனுஷோடு ராம்சரணுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு புகைச்சல் உள்ளது. தனுஷை கடுப்பேற்றுவதற்காகவே சிவகார்த்திகேயனை ஓவராய் கொண்டாடுகிறாராம் ராம் சரண்..

“ஆமாய்யா சிவகார்த்திகேயன் ஸ்டாண்ட் அப் காமெடியன் தான்! ஆனா அது ஒரு காலத்துல. ஆனா அவரை இன்னைக்கு இந்த ஃபீல்டுல ஸ்டாண்ட் பண்ண வெச்சதே அந்த காமெடிதான். ஒரு கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆவலாம், ஒரு அக்கவுண்டன்ட் மக்கள் செல்வனாகலாம், கார்மெண்ட்ஸ் கம்பெனியில வேலை பார்த்த ஒருத்தர் ‘தல’ ஆகலாம். ஆனால், ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மாஸ் ஹீரோவாக கூடாதா?” கடந்த 2-ம் தேதியிலிருந்து கோலிவுட்டை கலக்கி எடுக்கும் சோஷியல் மீடியா பதிவு இதுதான்.

சிவகார்த்திகேயனை கடந்த சில நாட்களாக தனுஷ் உள்ளிட்ட இளம் ஹீரோக்களின் ரசிகர்கள் டீம் வறு வறுவென வறுத்துக் கொண்டிருக்கிறது. காரணம்? ‘சிவகார்த்திகேயன் நிச்சயம் சூப்பர் ஸ்டாராவார்.’ என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், மாஸ் நடிகருமான ராம் சரண் ஓப்பனாக செப்பியதுதான். ‘ஆர் ஆர் ஆர்’ இசை வெளியீட்டு மேடையில் இந்த வார்த்தைகளை ராம்சரண் சொல்லியதில் இருந்தே திருப்பித் திருப்பி சிவகார்த்தியை போட்டு வெளுக்கின்றனர் போட்டி நடிகர்களின் ரசிக பட்டாளங்கள்.

இந்த வெளுப்பிற்குப் பின் அந்த ஹீரோக்களின் தூண்டுதல் கைகள் இருக்கிறது! என்னும் பேச்சுதான் கோலிவுட்டில் தற்போதைய பெரிய ஷாக்கே.

இந்நிலையில், சிவகார்த்தியின் புகழ் பாடுவதை மட்டும் ராம்சரண் விடவேயில்லை. ஆர் ஆர் ஆர் மேடையை விட்டிறங்கி, அதன் பின் பிரஸ் மீட் மற்றும் சேனலுக்கு பிரத்யேக பேட்டி என்று போன பின்னும் கூட அதை தொடர்ந்தார். ‘தமிழில் எந்த ஹீரோவோடு சேர்ந்து நடிக்க விரும்புறீங்க?’ என்று அவரிடம் கேட்டபோது ‘சிவகார்த்திகேயனுடன் தான். அவர் நிச்சயம் சூப்பர் ஸ்டாராவார்’ என்று மீண்டும் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், ராம் சரண் ஏன் சிவகார்த்தியை இந்தளவுக்கு புகழ்கிறார்? என்று கோலிவுட் ஸ்பை குருவிகள் துருவியபோது “சிவாவின் இயல்பான நகைச்சுவை நடிப்பு அவருக்கு பிடித்துள்ளது. அதுமட்டுமல்ல, தனுஷோடு ராம்சரணுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு புகைச்சல் உள்ளது.

செம்ம ஹிட் படமான தனுஷின் அசுரன் படத்தை தெலுங்கில் பண்ண முதலில் விரும்பி, அணுகினார் ராம் சரண். ஆனால் அது வெங்கடேஷின் கைகளுக்கு கொடுக்கப்பட்டது. இதில் தனுஷின் மூவ்கள் இருப்பதாக ராம்சரணுக்கு ஒரு தகவல் சென்றது.

அந்தப் பகையை தீர்க்கத்தான் தனுஷை கடுப்பேற்றுவதற்காகவே சிவகார்த்திகேயனை தமிழ் மண்ணுக்கு வந்து நின்று ஓவராய் கொண்டாடுகிறார் ராம் சரண்.” என்கின்றனர்.

எப்படி பார்த்தாலும் இவிய்ங்க கணக்கு கோடிகள்தான்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அனிருத்துக்கு 'MDS' எனப் பெயர் வைத்த தளபதி விஜய்! அப்படின்னா என்னன்னு தெரியுமா? வைரலாகும் பின்னணி!
3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை; பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் திரையுலகம்!