RRR Movie: ராஜமௌலியை சுழட்டி அடிக்கும் சோதனை.! 'ஆர் ஆர் ஆர்' படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

By manimegalai aFirst Published Jan 1, 2022, 5:53 PM IST
Highlights

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வெளியிட தயாராக இருந்த, இயக்குனர் ராஜமௌலி (Rajamouli) இயக்கியுள்ள 'RRR' திரைப்படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகார பூர்வ தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வெளியிட தயாராக இருந்த, இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள 'RRR' திரைப்படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகார பூர்வ தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கொரோனாவின் 3 ஆவது அலை இந்தியாவில் பரவ வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் வெளிநாட்டில் இருந்து கொரோனா உருமாறி ஓமிக்ரான் என்கிற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்து அச்சுறுத்த துவங்கியுள்ளது. இதன்காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதோடு, தற்போது தமிழக அரசு சில கட்டுப்பாடுகளையும் நடைமுறை படுத்த துவங்கி விட்டது.  இதன்காரணமாக இனி ரிலீஸ் செய்யப்படும் படங்களின் வசூல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதோடு, 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே மக்கள் நலன் கருதி அனுமதிக்க வாய்ப்புகள் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பிரமாண்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே வலிமை ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், படக்குழு திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்தது. இதை தொடர்ந்து ஜனவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆர் ஆர் ஆர் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் உலா வந்த நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக சற்று முன்னர் படக்குழு, தன்னுடைய சமூக வலைதளத்தில் 'ஆர் ஆர் ஆர்' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து போட்டுள்ள பதிவில், அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்டு படத்தை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளதாகவும், அனைவரது நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஆனால் அடுத்து எப்போது படம் ரிலீஸ் ஆகும் என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

பாகுபலி இரண்டு பாகத்தின் மாஸ் வெற்றிக்கு பிறகு,  இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR) என இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள  ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி  உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Keeping the best interests of all the involved parties in mind, we are forced to postpone our film. Our sincere thanks to all the fans and audience for their unconditional love. pic.twitter.com/JlYsgNwpUO

— RRR Movie (@RRRMovie)

click me!