"பெண்கள் சன்னி லியோன் போல ஆண்களை மகிழ்விக்க வேண்டும்…!!" - ராம் கோபால் வர்மாவின் வில்லங்க வாழ்த்து

 
Published : Mar 09, 2017, 09:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
"பெண்கள் சன்னி லியோன் போல ஆண்களை மகிழ்விக்க வேண்டும்…!!" - ராம் கோபால் வர்மாவின் வில்லங்க வாழ்த்து

சுருக்கம்

ram gopal varma tweet about womens day

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பெண்கள் தின வாழ்த்து கூறியிருந்தார். அதில் உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போல  ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என பதிவிட்டு பெண்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.

இயக்குநர் ராம் கோபால்  தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை கூறி எப்போது சிக்கலில் மாட்டிக் கொள்வார்.இதற்காக அவர் பல முறை மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இநிநிலையில் நேற்று உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில் உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போல  ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு பெண்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் ராம் கோபால் வர்மா பதிவிட்டிருப்பதாக ஏராளமானோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

மேலும் ராம் கோபால் வர்மா அவரது டுவிட்டர் பக்கத்தில், பெண்கள் தினத்தை, ஆண்கள் தினம் என்று தான் அழைக்க வேண்டும் ,ஏனென்றால், பெண்களை விட ஆண்களே, மகளிர் தினத்தை அதிகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் மார்ச் 8 ஆம் தேதி தவிர மற்ற நாட்கள் எல்லாம் ஆண்கள் தினம் தான் என்றும் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இவரின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து ராம் கோபால் வர்மா மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?