பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள் உயிரிழப்பு... குவியும் பிரபலங்களின் நிதியுதவி...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 2, 2020, 8:39 PM IST
Highlights

இதேபோல் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் “பிங்க்” படத்தில் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். 


 

தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டாரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். திரையுலகில் ரசிகர்கள் பாசமாக பவர் ஸ்டார் என அழைக்கும் பவன் கல்யாண், ஜன சேனா என்ற கட்சி மூலம் அரசியலிலும் கால் பாதித்தவர். இதனால் பவன் கல்யாணுக்கு ஆதரவாக ரசிகர்கள், தொண்டர்கள் என மிகப்பெரிய படையே உள்ளது. அதனால் பிறந்த நாள் கொண்டாட்டமும் வேற லெவலுக்கு களைகட்டி வந்தது. 

ஊர் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், தோரணம் என பவன் கல்யாண் பிறந்தநாளை ரசிகர்கள் மாஸாக கொண்டாடி வந்த நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் விதமாக துக்க சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் சாந்திபுரம் பகுதியில் பவன் கல்யாண் ரசிகர்கள் 6 பேர் பேனர் நேற்று இரவு 8.30 மணி அளவில் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இரும்பு சட்டங்களில் பொருத்தப்பட்ட பிளக்ஸ் பேனரை சாலையோரம் வைக்க முயன்ற போது, அது மின்கம்பியில் மோதியுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பவன் கல்யாணம் ரசிகர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது எனது கடமை என்றும் வாக்கு தெரிவித்துள்ளார். மேலும் மேலும்  3 இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஜன சேனா கட்சி அறிவித்துள்ளது.  இதேபோல் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் “பிங்க்” படத்தில் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். எதுவும் அவர்களுடைய உயிருக்கு ஈடாக முடியாது. ஆனால் அவர்களுடைய குடும்பத்திற்கு இந்த நெருக்கடி நேரத்தில் துணை நிற்க வேண்டியது அவசியம். அதனால் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா 2.5 லட்சம் நிதி உதவி வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார். இதேபோல் டோலிவுட்டின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளார்.
 

click me!