லிப் லாக் அடித்த ரகுல் ப்ரீத் சிங்கை விட்டுட்டு... சின்மையை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்கள்!

Published : Aug 10, 2019, 05:46 PM IST
லிப் லாக் அடித்த ரகுல் ப்ரீத் சிங்கை விட்டுட்டு... சின்மையை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்கள்!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக, நடித்துள்ள திரைப்படம் 'மன்மதுடு 2' .  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக, நடித்துள்ள திரைப்படம் 'மன்மதுடு 2' .

ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு தற்போது வரை, கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்து வருகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகளை சென்சார் அதிகாரிகள் அதிரடியாக நீக்கினர்.  அவற்றில் ஒன்றுதான் இந்த படத்தின் நாயகி ரகுல் ப்ரீத்திசிங், நடிகை ஜான்சிக்கு கொடுக்கும் லிப்கிஸ் முத்த காட்சி.  

இந்த காட்சி அமெரிக்கா உள்பட பல நாடுகளின் சென்சார் அதிகாரிகள்  அனுமதித்துள்ளதால் நீக்கப்பட்டது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. படக்குழுவினரையே அதிச்சியடைய செய்துள்ளது.  

இந்த காட்சியில் நடித்துள்ளது. ரகுல் ப்ரீத் சிங் என்றாலும், இந்த படம் குறித்த கேள்வி, சின்மயியை நோக்கி சென்றுள்ளது. பரவலாக தன்னுடைய ட்விட்டரில் பெண் உரிமை பற்றி அதிகம் பேசும் பாடகி சின்மயி இந்த காட்சியை எப்படி அனுமதித்தார் என்றும்? ஒருவேளை இந்த காட்சி அவருடைய ஐடியாவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த படத்தை இயக்கியுள்ளவர் சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் என்பது கூடுதல் தகவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?
அவ கூட வாழ முடியாது; டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க!" - அடம் பிடிக்கும் சரவணன்; கலங்கி நிற்கும் பாண்டியன்!