சன்னியின் எதிரி ராக்கிக்கு வந்த சோதனை... தொடர்ந்து டிமிக்கி கொடுத்ததால் ஜாமினில் வரமுடியாத பிடி வாரண்ட்... 

 
Published : Jun 02, 2017, 07:03 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
சன்னியின் எதிரி ராக்கிக்கு வந்த சோதனை... தொடர்ந்து டிமிக்கி கொடுத்ததால் ஜாமினில் வரமுடியாத பிடி வாரண்ட்... 

சுருக்கம்

Rakhi Sawant In Trouble Again Over Valmiki Remarks Arrest Warrant Issued

'ஹாட்டுன்னா காட்டு அப்படி ஒரு ஹாட்டு' பாலிவுட்டையே  தனது படுபயங்கர கவர்ச்சியால் கட்டிப்போட்ட கனவுக்கன்னி என்றல் அது நம்ம பக்கத்து நாட்டு ராக்கி சாவந்த். இவர் நடித்த படங்களை விட சர்ச்சையில் சிக்கியது தான் அதிகம். சன்னி லியோனுக்கு எப்போதுமே டப் கொடுப்பவர் நம்ம ராக்கி சாவந்த் தான்.

கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராக்கி சாவந்த் ராமாயணம் எழுதிய வால்மீகி குறித்து ஆபாசமான சர்ச்சை கருத்தைக் கூறி இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த நரிந்தர் ஆதியா என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கு மனுவில் வால்மீகி சமூகத்துக்கு எதிராகவும் இந்து மதத்தை புண் படுத்தும் வகையிலும் நடிகை ராக்கி சாவந்த் பேசி வருவதாக தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு குறித்து லூதியானா நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை ராக்கி சாவந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து ராக்கி சாவந்த் தவிர்த்து வந்த நிலையில் மீண்டும் நடிகை ராக்கி சாவந்திற்கு லூதியானா நீதிமன்றம் ஜாமீனில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!