10 கோடி வாங்கவில்லை...கமல் உத்தமன் ஞானவேல் ராஜாதான் வில்லன் ...விளக்கம் வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்...

Published : Sep 27, 2019, 06:08 PM IST
10 கோடி வாங்கவில்லை...கமல் உத்தமன் ஞானவேல் ராஜாதான் வில்லன் ...விளக்கம் வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்...

சுருக்கம்

கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்த படம் ரிலீஸ் ஆகும்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால்  முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.  

கமல் தன்னிடம் ‘உத்தம வில்லன்’பட ரிலீஸுக்காக 10  கோடி பணம் வாங்கிவிட்டு இதுவரை திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார் என்று ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் கூறியிருக்கும் புகார் அபாண்டமானது. அது கமலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது என்று ராஜ்கமல் நிறுவனம் இன்று விளக்கம் அளித்துள்ளது. 

கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்த படம் ரிலீஸ் ஆகும்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால்  முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூபாய் 10 கோடி  கடன் பெற்றதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்து வந்தார்.இந்த நிலையில் ரூபாய் 10 கோடி பெற்று நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நமது நிறுவனத்திற்காக கமல்ஹாசன் படம் நடிக்க முன்வரவில்லை என்றும் ரூபாய் 10 கோடி பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் தெரிவித்திருந்தார்.

ஞானவேல் ராஜாவின் அப்புகாருக்கு இன்று விளக்கம் அளித்த கமலின் ராஜ் கமல் நிறுவனம்,...தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு எந்த பணமும் வழங்கவில்லை. கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். ‘உத்தம வில்லன்’பட ரிலீஸ் சமயத்தில் ஞானவேல் ராஜாவை கமல் சந்திக்கவேண்டிய அவசியம் கூட ஏற்படவில்லை. இந்த அபாண்ட புகார் தொடர்பாக ஞானவேல் ராஜா மீது மிக விரைவில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்’என்று தெரிவித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மர்ம மரணம்... கடைசியாக வெளியிட்ட வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி