டயலாக்கில் கை வைத்த அரசியல் கமல்! நடிகர் கமலை தூக்கில் தொங்கவிட்ட இயக்குநர் ஷங்கர்: இந்தியன் -2 வின் எக்ஸ்க்ளூஸிவ் பஞ்சாயத்துகள்

By Vishnu PriyaFirst Published Sep 27, 2019, 6:01 PM IST
Highlights

ஊழல் எனும் தேசிய வியாதிக்கு எதிராக எத்தனையோ தமிழ்ப் படங்கள் முரசு கொட்டியிருக்கின்றன. ஆனால் கத்தியை எடுத்து, ஊழல் அதிகாரிகளை சதக்! சதக்கென சொருகித் தள்ளிய படங்களில் முன் வரிசையில் முதலாவதாக நிற்பது ’இந்தியன்’தான்

ஊழல் எனும் தேசிய வியாதிக்கு எதிராக எத்தனையோ தமிழ்ப் படங்கள் முரசு கொட்டியிருக்கின்றன. ஆனால் கத்தியை எடுத்து, ஊழல் அதிகாரிகளை சதக்! சதக்கென சொருகித் தள்ளிய படங்களில் முன் வரிசையில் முதலாவதாக நிற்பது ’இந்தியன்’தான். ஊழல் பேர்வழியான ஹீரோ கமல்ஹாசனை, நீதிமானான அவரது அப்பா கமலே கொல்லும் காட்சிதான் அப்படத்தின் ஹிட் ஹாட் ஹைலைட்டு. இன்றளவும் ஊழலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் சக்கை போடு போடுவது இந்தியன் தாத்தாதான். 

இந்த நிலையில் தான் மீண்டும் கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை துவக்கினார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரிப்பில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை துவக்க நிலையிலேயே பல பிரச்னைகள். கமலுக்கு போடப்பட்ட தாத்தா மேக் - அப் ஷங்கருக்கு திருப்தி தரவில்லை. அதேபோல் பட்ஜெட் பிரச்னை இடித்தது. ஷூட்டிங் சில நாட்கள் தள்ளிப்போடப்பட்டதுமே கமல்ஹாசனோ அரசியலில் பிஸியனார் அடுத்து பிக்பாஸினுள் நுழைந்தார். வெறுத்துப் போன ஷங்கரோ வேறு படத்தை கையிலெடுக்கப்போனார். 

இப்படியெல்லாம் போய்க் கொண்டிருந்த நிலையில், பல தரப்பு பேச்சுவார்த்தைகள், சமாதான தூதுகள், பட்ஜெட் தாராளமயமாக்கல், பேட்ச் - அப் வேலைகள் என்று பலவற்றின் மூலமாக மீண்டும் ‘இந்தியன் 2’ படம் உயிர்ப்பெற்றிருக்கிறது. கமல்ஹாசன், சிதார்த், காஜல் அகர்வால்,  ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடன் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டாவது ஷெட்யூலுக்காக ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியிலுள்ள சிறைச்சாலைக்கு சமீபத்தில் கமல் சென்றார். 

இந்த சூழலில் இந்தப் படம் குறித்து இரண்டு எக்ஸ்க்ளூஸிவ் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்று! ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் - படத்தில் துவங்கி சமீபத்தில் வெளியான 2.O வரை அவர் எழுதிய டயலாக்குகளில் ஹீரோக்கள் கை வைத்ததே கிடையாது. முன்பு அறிவியல் எழுத்தாளர் சுஜாதாவுடனும், அதன் பின் தற்போது ஜெயமோகன் மற்றும் மதன் கார்கியுடனும்தான் டயலாக்குகளை வடிவமைக்கிறார் ஷங்கர். பாய்ஸ் புதுமுக பசங்க வரை எந்திரனின் ரஜினி வரை ஷங்கர் சொன்ன வசனங்களை அப்படியே பேசி நடித்ததே வாடிக்கையாக இருந்தது. இந்தியன் படத்திலும் கூட கமலும் இதையே செய்தார். ஆனால், தற்போதோ கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் டயலாக் போர்ஷன்களில் மெதுவாக தலையிட்டு, பிறகு நிறையவே கருத்து சொல்கிறாராம். 

முன்பு கமல்ஹாசன் வெறும் நடிகர்! அவ்வளவே. ஆனால் இப்போது அவர் ஒரு கட்சியின் தலைவர். அவரிடமிருந்து ரசிகர்கள், மக்கள் பெரிதாய் எதிர்பார்க்கின்றனர். இந்த சூழலில் கமல் தனக்கும், தன் கட்சிக்கும், தமிழக அரசியல் சூழலுக்கும் ஏற்ப மிக விறைப்பாகவும், முறைப்பாகவும், ஷார்ப்பாகவும் வசனம் பேசுவது எனும் முடிவில் இருக்கிறார். இந்தப் படமானது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு அரசியலில் பெரியளவில் கை கொடுக்க வேண்டும், அதற்கேற்ப இதை உருவாக்க வேண்டும்! என்று நினைக்கிறாராம். எனவேதான் ஷங்கரின் டயலாக்குகளை சற்றே திருத்துவது, மாற்றுவது, கூடுதல் கருத்துக்களை சேர்ப்பது என்றெல்லாம் மூக்கை நுழைக்கிறாராம். இதில் ஷங்கருக்கு பெரியளவில் கோபம் இல்லை என்றாலும் அசெளகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் ஷூட் போய்க் கொண்டிருக்கிறது. 

எக்ஸ்க்ளுஸிவ் செய்தி ரெண்டு: இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸானது வயதான கமலை தூக்கில் ஏற்றுவதோடு முடிகிறது என்கிறார்கள். ராஜமுந்திரியில் சிறைக்காட்சிகளை எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் பெரியளவில் தூக்குமேடை செட் போடப்பட்டு, அதில் கமலை தூக்கி தொங்கவிடுவது போல் படமாக்கப்பட்டுவிட்டதாம். இதுதான் படத்தின் க்ளைமேக்ஸாம். 

செம்ம சீக்ரெட்டான இந்த தகவல் ஸ்பெஷலாய் கசிந்துவிட்டது கமலுக்கும், ஷங்கருக்கும் தலைவலிதான். 

click me!