'காலா' வெற்றியை கொண்டாடி வந்த ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தகவல்...!

 
Published : Jun 10, 2018, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
'காலா' வெற்றியை கொண்டாடி வந்த ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தகவல்...!

சுருக்கம்

Rajini fans who were celebrating Kala were shocked news

'காலா' திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் தான்.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆனால் கிராபிக் காட்சி பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இதை தொடர்ந்து, தற்போது 2.0 திரைப்படத்திற்கு பின் படப்பிடிப்பை ஆரம்பித்த 'காலா' திரைப்படம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்திவிட்டது. மேலும் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் 2.0 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி 2.0 படம் இந்த வருடம் வர வாய்ப்பில்லையாம். அடுத்த வருடம் 2019 துவக்கத்தில் தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஏகப்பட்ட கிராபிக் காட்சிகள் உள்ளதால், அவற்றை முடிக்க சற்று நேரம் தேவைப்படுவதாகவும், அதனால் இந்த வருடம் வெளிவர வாய்ப்பே இல்லை என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் இரண்டு தலைவர் படங்கள் பார்க்கலாம் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த ரஜினி ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!