தமிழ் சினிமாவில் யோகிபாவுக்கு காத்திருக்கும் யோகம்! சூப்பர் ஸ்டாரிடம் கிடைத்த வாழ்த்து!

Published : May 02, 2019, 03:29 PM IST
தமிழ் சினிமாவில் யோகிபாவுக்கு காத்திருக்கும் யோகம்! சூப்பர் ஸ்டாரிடம் கிடைத்த வாழ்த்து!

சுருக்கம்

வளர்ந்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துக்கள் கிடைத்து விடுவது இல்லை. அதிலும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பலரது கனவு என்றும் கூறலாம்.  

வளர்ந்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துக்கள் கிடைத்து விடுவது இல்லை. அதிலும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பலரது கனவு என்றும் கூறலாம்.

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தில் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார் காமெடி நடிகர் யோகிபாபு.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபு நடித்துள்ள 'தர்மபிரபு' படத்தின் டீசரை பார்த்து, ரஜினிகாந்த் இந்த படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இவர் ஒவ்வொரு படங்களிலும்அவர்  ஈடுபாடுடன் நடிப்பதை பார்த்து வியந்து, அவரை பாராட்டியதோடு, தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு காத்திருப்பதாக கூறி வாழ்த்தியுள்ளார். இதனால் யோகி பாபு இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?