கண்ணா ஹா ஹா சூப்பர்... மாநகரம் படக்குழுவை வாழ்த்திய ரஜினிகாந்த்...

 
Published : Mar 15, 2017, 04:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
கண்ணா ஹா ஹா சூப்பர்... மாநகரம் படக்குழுவை வாழ்த்திய ரஜினிகாந்த்...

சுருக்கம்

rajinikanth wish the managaram movie team

சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மாநகரம்.

இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் பார்த்து விட்டு, திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் படக்குழுவினர் அனைவரையும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

மேலும் படத்தை பார்த்ததுமே இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் போன் செய்து கண்ணா ஹா ஹா ....படம் பார்த்தேன் கலக்கிட்டடீங்க , சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க , கலக்குங்க என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளிவந்த, ஜோக்கர் படத்தை பார்த்து விட்டு, படக்குழுவினர் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து இது போன்ற தரமான படங்களை தொடர்ந்து கொடுங்கள் என வாழ்த்தினார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!
அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!