சூப்பர்ஸ்டார் முதல் மெகாஸ்டார் வரை... அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கிற்கு படையெடுத்து வந்த சினிமா பிரபலங்கள்

By Ganesh A  |  First Published Jan 22, 2024, 10:44 AM IST

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுள்ள சினிமா பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமின்றி சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் நேற்றே அயோத்திக்கு சென்றுவிட்டார். அவர்களுடன் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவும் சென்றிருக்கிறார். அதேபோல் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் அயோத்தி குடமுழுக்கு விழாவில் பங்கேற்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நேரலை

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள குடும்பத்தோடு தனி விமானத்தில் கிளம்பி சென்றார் நடிகர் சிரஞ்சீவி pic.twitter.com/mBh1xX12rF

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரான சிரஞ்சீவி தன்னுடைய மனைவி மற்றும் மகன் ராம்சரண் ஆகியோருடன் தனி விமானத்தில் அயோத்திக்கு இன்று காலை கிளம்பி சென்றார். அவர்களுக்கு அயோத்தி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பவர் ஸ்டார் பவன் கல்யாணும் அயோத்தி விழாவில் பங்கேற்றுள்ளார்.

அயோத்தி விமான நிலையத்தில் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. pic.twitter.com/Eg2hZeeEiW

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

பாலிவுட் திரையுலகில் இருந்து நடிகர் அனுபம் கெர், நடிகை கங்கனா ரணாவத், நடிகர் ரன்தீப் ஹூடா, நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூர், நடிகர் விக்கி கவுஷல், நடிகர் அமிதாப் பச்சன், பாடகர் சோனு நிகம், இயக்குனர் ரோகித் ஷெட்டி உள்பட ஏராளமான பிரபலங்கள் படையெடுத்து வந்து அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கில் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்... அயோத்தி ராமர் கோயில் விண்வெளியில் இருந்து எப்படித் தெரிகிறது தெரியுமா? இஸ்ரோ வெளியிட்ட படம்!

click me!