
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால், அடுத்தபடத்தில் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ரஜினி. இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி, இறுதியில் டாக்டர் படம் பார்த்து பிடித்துப்போனதும் நெல்சனிடம் கதை கேட்டு ஓகே செய்தார்.
பீஸ்ட் படம் ரிலீசுக்கு முன்பே தலைவர் 169 படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனிடையே நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதை பார்த்த ரஜினி, அவருக்கு பதில் வேறு இயக்குனரை தேர்வு செய்யும் மனநிலையில் இருந்தாராம்.
பின்னர் நெல்சனின் நண்பரான அனிருத், ரஜினியிடம் பேசி சமாதானம் செய்த பின்னரே நெல்சனுக்கு ஓகே சொன்னாராம் ரஜினி. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் தலைவர் 169 பட ஸ்டில்லை வைத்தார். அதேவேளையில் நெல்சனும் தனது டுவிட்டர் பக்கத்தில் தலைவர் 169 என குறிப்பிட்டு இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாம்.
இந்நிலையில், ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள தலைவர் 170 படம் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதன்படி கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தான் அடுத்ததாக ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே மாதம் 20-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதன்பின் தலைவர் 170 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ‘KGF 2’ படம் பார்த்த பின் ‘புஷ்பா 2’ ஷூட்டிங்கை திடீரென நிறுத்திய இயக்குனர்... ஏன் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.