‘KGF 2’ படம் பார்த்த பின் ‘புஷ்பா 2’ ஷூட்டிங்கை திடீரென நிறுத்திய இயக்குனர்... ஏன் தெரியுமா?

Published : Apr 24, 2022, 02:25 PM IST
‘KGF 2’ படம் பார்த்த பின் ‘புஷ்பா 2’ ஷூட்டிங்கை திடீரென நிறுத்திய இயக்குனர்... ஏன் தெரியுமா?

சுருக்கம்

Pushpa 2 : கே.ஜி.எஃப் 2 படத்தை பார்க்க சென்ற இயக்குனர் சுகுமார், அப்படத்தை பார்த்த பின் புஷ்பா 2 ஷூட்டிங்கை நிறுத்திவிட்டாராம்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் கடைசியாக நடித்த படம் புஷ்பா. இப்படத்தில் செம்மரக் கடத்தல் மன்னனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கிருந்த இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகாவும், வில்லனாக பகத் பாசிலும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது பாடல்கள் தான். அதன்படி இதில் இடம்பெறும் ஓ சொல்றியா மாமா என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கு பட்டைய கிளப்பியது. அதோடு அப்பாடலுக்கு நடிகை சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் வைரல் ஹிட் ஆனது.

இதுதவிர சித் ஸ்ரீராம் பாடிய ஸ்ரீவள்ளி என்கிற பாடல் ரீல்ஸ் மூலம் மிகவும் பேமஸ் ஆனது. அல்லு அர்ஜுன் ஆடிய நடனத்தை கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் ஆடும் அளவுக்கு வேறலெவல் ஹிட் அடித்தது. புஷ்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஒரு நாள் கே.ஜி.எஃப் 2 படத்தை பார்க்க சென்ற இயக்குனர் சுகுமார், அப்படத்தை பார்த்த பின் புஷ்பா 2 ஷூட்டிங்கை நிறுத்திவிட்டாராம். ஏனெனில் புஷ்பா 2 படமும் கேஜிஎஃப் 2 படத்துக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்து வருகிறாராம். இதனால் புஷ்பா முதல் பாகத்தை விட அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Pushpa : டி.ஆர்.பி-யில் அடிச்சு தூக்கிய புஷ்பா... முதன்முறையாக விஜய்யை பீட் பண்ணி கெத்து காட்டிய அல்லு அர்ஜுன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?