Koogle Kuttapa : பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் - லாஸ்லியா நடித்த ‘கூகுள் குட்டப்பா’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published : Apr 24, 2022, 11:51 AM IST
Koogle Kuttapa : பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் - லாஸ்லியா நடித்த ‘கூகுள் குட்டப்பா’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுருக்கம்

Koogle Kuttapa : கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போடியாளர்களாக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர்கள் தர்ஷன் - லாஸ்லியா. இவர்கள் இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளனர். கூகுள் குட்டப்பன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தயரித்துள்ளதோடு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளனர். இது மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக் ஆகும். ரோபோ ஒன்றும் இப்படடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கூகுள் குட்டப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இப்படம் வருகிற மே மாதம் 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படமும் ரிலீசாக உள்ளது. இதுவும் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.... தோனி முதல் ருதுராஜ் வரை... காத்துவாக்குல ரெண்டு காதல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட CSK வீரர்கள் - வைரல் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?