'ஜெயிலர்' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ஜுஜுபி, நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூலை 28ஆம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ள நிலையில், படக்குழு அடுத்த அடுத்த புரோமோஷன் பணிகளில் தீவிரம் செலுத்தி வருகிறது.
'குக் வித் கோமாளி' சீசன் 4 வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதா? வெளியான தகவல்!
ஏற்கனவே 'ஜெயிலர்' படத்தில் இருந்து வெளியான, காவாலா பாடல் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இன்ட்ரோ பாடலான ஹுக்கும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அடுத்ததாக மூன்றாவது சிங்கிள் பாடலின் ரிலீஸ் குறித்த தகவலை தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பயம் காட்டிய ஜீவானந்தம்..! உயிர் பயத்தில்... நடு வீட்டில் ஒப்பாரி வைத்த குணசேகரன்! இன்றைய ப்ரோமோ
அதன்படி ஜூ ஜூபி எனத் தொடங்கும், மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸிலு, விநாயகன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.