நெல்சா வேறமாரி... வேறமாரி! ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் உடன் வந்த அட்டகாசமான புரோமோ இதோ

By Ganesh A  |  First Published Jul 3, 2023, 7:01 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் நெல்சன். முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நெல்சன், அடுத்ததாக தனது நண்பன் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்து டாக்டர் என்கிற படத்தை இயக்கினார். இப்படமும் வேறலெவல் ஹிட் அடித்ததோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

டாக்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நெல்சனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன இப்படம் தோல்வியை சந்தித்தது. பீஸ்ட் படத்திற்கு பின்னர் நெல்சனுக்கு ரஜினியின் ஜெயிலர் பட வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் மூலம் எப்படியாவது கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என தீயாய் வேலை செய்து வருகிறாராம் நெல்சன்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பாலிவுட்டிற்கே பயம் காட்டிய ரஜினி! ஜெயிலர் படத்துக்கு போட்டியாக ரிலீஸாக இருந்த இந்தி படம் திடீரென தள்ளிவைப்பு

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சுனில், மோகன்லால், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், யோகிபாபு, வஸந்த் ரவி, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. 

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் நெல்சன் மற்றும் அனிருத்தின் கலாட்டாவான உரையாடல்களுடன் கூடிய இந்த புரோமோ வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. அந்த புரோமோவில் வருகிற ஜூலை 6-ந் தேதி ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான காவாலா என்கிற பாடல் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... மாட்டிவிட்டுட்டியே பங்கு... நடிகர் தனுஷுக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை அமபலப்படுத்திய ரோபோ சங்கர்

click me!