
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் வரும் ஆசிரமம் பள்ளியில், கடந்த 6 மாதமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் அங்கு பணியில் உள்ள அனைவரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சென்னனயில் முக்கிய பகுதியான, கிண்டியில் அமைத்துள்ள ஆசிரமம் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில், 1,200கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு 75, ஆசிரியர்கள், 26 வேன் ஓட்டுனர்கள் மற்றும் வேலைப்பணியாட்கள் வேலை செய்து வருகின்றனர் . தற்போது இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் ஓட்டுனர்கள் தீடீர் என பள்ளி வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதே போல் ஆசிரியர்கள் சம்பளம் தராததால் கொந்தளித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.