மீண்டும் 'எனக்குத் தெரியாது' என்ற ரஜினி! ட்ரெண்டிங்கில் வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

By SG Balan  |  First Published Sep 1, 2024, 4:04 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரளாவில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரளாவில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து மலையாளத் திரையுலகமே கதிகலங்கி போயிருக்கிறது. மலையாளத் திரையுலகில் பல நடிகைள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி இருப்பதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. மோகன்லால், ஜெயசூர்யா உள்பட முன்னணி நடிகர்கள் பெயர்களும் சிக்கியுள்ளன.

Tap to resize

Latest Videos

ஹேமா கமிட்டி அறிக்கை தமிழ்த் திரையுலகிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவிலும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று சில நடிகைகள் கூறியுள்ளனர். கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி அமைத்து இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்படுகின்றன.

ஹைபிரிட் அவதாரம் எடுத்த எம்.ஜி. ஆஸ்டர் கார்! இந்தியாவில் ரிலீஸ் எப்போது?

ரஜினியின் பதில்:

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  அவர் நடிப்பில் உருவாகிவரும் கூலி படத்தின் பணிகள் நன்றாகப் போய்க்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார்ப் பந்தயத்திற்கும் வாழ்த்து கூறினார்.

இந்நிலையில், மலையாளத் திரையுலகை உலுக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றியும் கருத்து கேட்கப்பட்டது. தமிழ் சினிமாவுக்கு அதேபோன்ற கமிட்டி அமைக்க வேண்டுமா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தலைவர் ரஜினிகாந்த், "எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது" என்று கூறினார். இந்தப் பதிலைக் கேட்டு செய்தியாளர்கள் அனைவரும் வாயடைத்துப் போனார்கள்.

ரஜினிக்குத் தெரியாது:

ரஜினி செய்தியாளர் சந்திப்பில் "எனக்குத் தெரியாது" என்று பதில் சொல்வது புதிதல்ல. 2018ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "யார் அந்த 7 பேர்? எனக்கு அவர்களைத் தெரியாது" என்று பதில் சொன்னார்.

கடந்த ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவின்போது, தமிழ்நாட்டுக் கோயில்களில் எந்த சிறப்பு பூஜையும் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். தலைவர் ரஜினிகாந்த் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியதும் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டைப் பற்றிக் கூறியது பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு தனது வழக்கமான ஸ்டைலில் "எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு நழுவிவிட்டார்.

ட்ரெண்டிங்கில் ரஜினி:

இப்போது மீண்டும் ரஜினி ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி "எனக்குத் தெரியாது" என்று கூறியிருப்பது நெட்டிசன்களுக்கு வைரல் கண்டென்டாக மாறியுள்ளது. ரஜினியின் பேச்சை #ரஜினிக்குத்_தெரியது என்ற ஹேஷ்டேக் போட்டு கலாய்த்து வருகிறார்கள். சிலர் ரஜினிக்கு ஆதரவாக அவர் வெகுளித்தனமாகக் கூறியிருக்கிறார் என்று முட்டுக்கொடுக்கிறார்கள்.

பல நெட்டிசன்கள் ரஜினியின் அசட்டுப் பேச்சை இஷ்டத்துக்கு கிண்டலும் கேலியும் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தனது துறையில் நடக்கும் தவறையே கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று கடுமையான சாடுகின்றனர். இதனால், தலைவர் ரஜினி நெட்டிசன்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

உணவு வீணாவதைத் தவிர்க்க பிரிட்ஜை முழுசா பயன்படுத்தணும்! இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

click me!