செம்பியன் மாதேவி படத்தின் இயக்குநருக்கு ஷாக் கொடுத்த கடலூர் ரசிகர்கள்

By Velmurugan s  |  First Published Sep 1, 2024, 12:55 PM IST

என் சொந்த ஊரிலேயே தியேட்டர் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்த  செம்பியன் மாதேவி பட இயக்குநருக்கு ஷாக் கொடுத்த கடலூர் ரசிகர்கள்.


8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்து, இயக்கி  நடித்த செம்பியன் மாதேவி திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. தமிழ்நாட்டில் சுமார் 25 க்கும் குறைவான  திரையரங்குகளில் மட்டுமே இந்த படம் திரையிடப்பட்ட நிலையில் தற்போது விமர்சன ரிதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் அவரது சொந்த ஊரான கடலூரில் கமலம் திரையரங்கில் செம்பியன் மாதேவி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில் இன்று திரைப்படத்தின் இயக்குனரும், நடிகருமான  லோக பத்மநாபன் வந்தபோது ரசிகர்கள் அவருடன் கை கொடுத்து, செல்பி எடுத்து கொண்டனர். நல்ல படம் என்று தங்களது கருத்துக்களையும் கடலூர் மக்கள் அவரிடம் தெரிவித்துச் சென்றனர். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தால்... 'GOAT' படத்தின் உள்ளே வந்த தளபதி விஜய்! வெங்கட் பிரபு கூறிய தகவல்!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லோக பத்மநாதன் கூறுகையில், நல்ல கதைகள் வெற்றி பெறும் என்பதை  தமிழ் மக்கள் உணர்த்தியுள்ளனர். படத்திற்கு கொடுத்த வரவேற்புக்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 28ம் தேதி சொந்த ஊரில் படம் ரிலீஸ் ஆகவில்லை என வருத்தம் தெரிவித்த நிலையில் கடலூரில் இந்த திரைப்படத்தை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

click me!